பாகிஸ்தான் தொடரினை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம்.. (Video)

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊக்குவிக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவுடனான தொடர் தோல்வியை தொடர்ந்து இலங்கை அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று டி 20 போட்டியில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுடனான தொடரை வெல்ல இலங்கை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் சித்திரவதைக்கு திரும்பிவிட்டேன், எனினும் இதை நேசிக்கிறேன் என தான் உடற்பயிற்சி கூடத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ..