பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் அந்த நாட்டுக்கான அல்-காய்தா அமைப்பின் தலைவர் அப்தாலி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இத்தாக்குதல் கொலை குறித்து அந்நாட்டின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் ஷுஜா கான்ஸாதா தெரிவிக்கையில்;
லாகூருக்கு அருகே பயங்கரவாதத் தடுப்புப் படையினர் திங்கட்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்,அவர்களில் ஒருவர் அல்-காய்தாவின் பாகிஸ்தான் பிரிவுத் தலைவர் அப்தாலி என்பது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
தொடந்து கூறுகையில், இந்தியத் துணைக் கண்டத்துக்கான அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ளதாகவும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் ஷுஜா கான்ஸாதா கூறினார்.
(riz)