வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய கலாவத்தையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 45000 ரூபாய் போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த நபர் பல போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி வவுனியா வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளதுடன் 1000 ரூபாய் பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.