உள்ளூராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மீண்டும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும், குறித்த இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
E-(reeshma)