கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

சுற்றுச்சூழல் மாசினாலும் நம்முடைய உணவுப் பழக்கத்தினாலும் தலைமுடியில் கெட்ட நாற்றம் வருகிறது. சரியான காரணம் தெரியாமல் அதனை எப்படி தவிர்ப்பது என்று புரியாது அப்படியானால் இது உங்களுக்குத்தான். வீட்டிலிருப்பதைக் கொண்டே முடியிலிருந்து நாற்றம் வருவதை கட்டுப்படுத்த முடியும்.

தக்காளிச்சாறு :
உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள்.அதனை கூழாக்கி தலைமுழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். முடியின் எல்லா பாகங்களுக்கும் தக்காளிச்சாறு படுமாறு தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். எப்போதும் மைல்டான ஷாம்புவையே பயன்படுத்துங்கள்.

பேக்கிங் சோடா :
குளிக்கும் போது 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1 கப் நீரில் கலந்து, அலசினால், கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, குளோரின் தண்ணீரால் நிறமிழந்து இருக்கும் கூந்தலை அழகாக்கும்.

எலுமிச்சை சாறு :
ஒரு கப் தயிருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பின்னர் இந்த கலவையை தலைமுழுவதும் ஹேர் மாஸ்காக அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளித்து விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் உண்டு.

தேன் :
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள்.அது இலேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அரை டீஸ்பூன் பட்டைத்தூளை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்கச் செய்து இறக்கிவிடலாம். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலைமுழுவதும் தேய்க்க வேண்டும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். அதிகமான ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

முட்டையின் வெள்ளைக்கரு :
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிர் சேர்த்து தலைமுழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளித்து விடுங்கள்.