ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை(16) இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொது எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

பாதீடு விவாதம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட உள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.