(FASTGOSSIP|AMERICA) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது.
அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன.
470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார் என தெரிவிக்கப்படுகின்றன.
இந்த குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் 9 நிமிட இடைவெளியில் பிறந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.