சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டம் குறித்து கேள்வி..

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பட்டத்தை வழங்கியதன் பின்னர், குறித்த பட்டத்தை வழங்கிய நிறுவனத்தை மூடிவிடுவதனால் குறித்த மருத்துவ பட்டத்திற்கு எந்த பெறுமதியும் இல்லை என மாலபே தனியார் மருத்துவ கல்லுரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவினால் வழங்கப்பட்ட இறுதி தீர்மானத்தின் படி சைட்டம் தொடர்பான பிரச்சினை மேலும் வலுபெற்றுள்ளதாக பெற்றோர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்துடன் நேற்று(16) கொழும்பில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மாலபே தனியார் மருத்துவ கல்லுரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் இணைப்பாளர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்;

“..உலகத்தின் எந்த பகுதிகளிலும் தற்போது சைட்டம் பட்டம் ஏற்றுக்கொள்ளப்படாது.சைட்டம் மாணவர்களின் பரீட்சை நிறைவு பெற்றதன் பின்னர் குறித்த நிறுவனத்தை கலைக்க ஹர்ச டி சில்வா யோசனை முன்வைத்துள்ளார். அவ்வாறு கலைக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பட்டத்தை வைத்துக் கொண்டு தங்கள் பிள்ளைகள் எங்கு செல்வார்கள் என்பது பாரிய பிரச்சினை..” என குறிப்பிட்டார்.

#reeshma