நாம் 9.4 மில்லியனுக்கு ஹில்டனில் சாப்பிடவில்லை – மறுக்குறார் மஹிந்த

நாம் 9.4 மில்லியனுக்கு ஹில்டனில் சாப்பிடவில்லை – மறுக்குறார் மஹிந்த

கடந்த காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 9.4 மில்லியன் ரூபாவுக்கு காலை உணவை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டானது உண்மையை திரிபுப்படுத்திய குற்றச்சாட்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப் பிரிவு வெளியிட்டுளா அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ராஜபக்ஷ குடும்பத்தினர் ஹில்டன் ஹொட்டலில் இருந்து ஒரு வேளை காலை உணவை பெற்று கொண்டமைக்காக 9.4 மில்லியன் ரூபாவுக்கான பற்றுச்சீட்டு கிடைத்துள்ளதாகவும் இதுவரை அந்த பணத்தை ராஜபக்ஷவினர் செலுத்தவில்லை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஹில்டன் ஹோட்டலின் ஆவணம் ஒன்றையும் ஊடகங்களுக்கு வழங்கியிருந்ததுடன் இச்செய்தியானது ஊடகங்களில் கோடிடப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இது குறித்து, நளின் பண்டார குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வைத்த ஆவணம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஹில்டன் ஹோட்டல் வழங்கியிருந்த பற்றுச்சீட்டு (இன்வொய்ஸ்) ஆகும்.

மேலும், 2013 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப நாள் வைபவத்தில் கலந்து கொண்ட ஆயிரத்து 400 உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்காக வெளியிடப்பட்ட இன்வொய்ஸாகும்.

இவ்வைபவத்தில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால், அது ராஜபக்ஷ குடும்பத்தினர் காலை வேளை உணவு அல்ல என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்..

இக்குற்றச்சாட்டானது 30 வருட கால போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கடந்த ஜனவரி 8 ஆம் திகதி கவிழ்க்க அந்த அரசாங்கத்தின் மீது சுமத்திய பொய்க் குற்றச்சாட்டுக்களை போல இந்த பொய்க் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Untitled-1

(riz)