
கோட்டபாய ராஜபக்ஷவின் கோரிக்கையினை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு ..
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தாக்கல் செய்யப்பட்ட எவன்ட் கார்ட் வழக்கில் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையினை மேல் நீதிமன்றம் இன்று(02) நிராகரித்துள்ளது.
எவன்காட் மெரிட்டைம் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலையை நடத்தி செல்வதற்கு அனுமதி அளித்தன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ருபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அதற்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ மேல்நீதிமன்ற முன்னிலையில், குறித்த வழக்கு இலஞ்ச மற்றும் ஊழல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மேல்நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கையில், இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு என்பவை இரண்டு அல்ல ஒன்று எனவும் அவ்வாறு உத்தியோகபூர்வ ஒப்புதல் அவசியமற்றது எனவும் எனவும் தெரிவித்துள்ளார்.
#rishma