உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளமை அனைவரும் அறிந்ததே..
அதன்படி, நாட்டின் பிரதமர் குறித்தும் பரவலாக மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
பாராளுமன்றத்திற்கு பிரிதொரு பிரதமரை நியமித்து புதியதொரு ஆட்சியினை கொண்டு வருமாறும் அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் நாட்டில் உள்ள அனைவரதும் கவனம் அரசியலையே குறியாக இருக்கின்றது எனலாம்..
எவ்வாறாயினும், கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சோதிடர் இந்திக தொடவத்தவினால் இதுகுறித்து ஏலவே கணிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தமையும் நினைவுகூறத்தக்கது.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், மீன ராசி உள்ள பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு தலைமை பறிபோகும் நிலைமை ஏற்படும், அவர் அவரது பதவியினை தக்கவைத்துக் கொள்ள கூடிய கவனம் செலுத்துவார். அதிகளவு மனதளவில் சோர்ந்து போவார். அவருக்கு எதிராக பல சோதனைகள் வரும், யாரும் துணை போக மாட்டார்கள், இந்தாண்டு அரைப்பகுதி வரையில் அவரது காலம் இவ்வாறே செல்லும் என கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
அதன்படி, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி மீன ராசியில் பிறந்துள்ளார் என இதற்கு முன்னர் இந்திக தொடவத்த நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma