(FASTNEWS | COLOMBO) – முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று(11) காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால், பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது.
இந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, மேற்படி குழுவை நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.