50 அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு தயார் – வசந்த

ஐம்பது அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு தயாராகி வருவதாக ஊழலுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் பட்டியலில் செவனகல மற்றும் பெலவத்த சீனி தொழிற்சாலைகள் ஆகியன உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பெரும்பாலான நிலங்கள் முன்னரே விற்பனை செய்யப்பட்டுள்ளன, இனி விற்பனை செய்வதற்கு அங்கு ஒன்றும் இல்லை என்றும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

இந்நிலை குறித்து மக்கள் அமைதியாக இருப்பதனால் இதற்கு எதிராக போராடுவது பெரும் சவாலாகவே உள்ளது என்றும் வசந்த சமரசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.