(FASTNEWS|COLOMBO) – ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றினை வைத்திருந்த ஒருவர் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் இருந்து 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய 501 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.