50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன், சந்தேகநபர்கள் நால்வரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (05) காலை கைது செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்காவை வந்தடைந்த விமானம் ஒன்றிலேயே, மேற்படி சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில், 1,50,000 சிகெரெட்டுகள் இருந்ததாகவும் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.