நைஜீரியாவில் கும்பலினால் கடத்தப்பட்டு சுமார் 9 நாட்கள் வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கை பொறியியலாளர் டி. எ.கருணதாச என்பவரை விடுவிக்க 50 கோடி பணமாக வழங்கப்பட்டதாக இத்தாலியூடாக செய்திகள் கசிந்துள்ளன.
இப்பொறியியலாளரின் விடுவிப்பு தொடர்பில்
நைஜீரியாவில் வசிக்கும் பெயர்குறிப்பிட விரும்பாத நபரொருவர் கூறுகையில்;
”இவரைக் காப்பாற்றியது இத்தாலி இனச் சகோதரர்களே அன்றி வேறு யாருமில்லை. அவர்கள் இல்லையெனில் கருணதாச அவர்கள் புதை குழியில் படுத்திருப்பார். எனக்கு இத்தாலி சகோதரர்களின் மீது அலாதிப் பிரியமும் தனி மரியாதையும் உண்டு. அவர்கள் அவர்களது நாடிட்கு சர்வதேச ரீதியாக மனித உரிமை எனும் பெயரில் கை நீட்டுவதற்கு இடமளிப்பதில்லை. நான் இதனை பெரிதும் பாராட்டுகின்றேன். இன்னும் இத்தாலி முன்னேற வேண்டுமென்றும் கூற விரும்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.