500 ஆண்டுகள் சென்றாலும் மஹிந்த போன்ற தலைவர் உருவாக மாட்டார் – குமார வெல்கம

இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றதொரு தலைவர் உருவாக மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது அளவு கடந்த நேசம் கொண்டுள்ளனர்.

இவ்வளவு மக்களினால் நேசிக்கப்படும் ஒர் தலைவர் இலங்கையில் மட்டுமன்றி உலகிலேயே இல்லை எனலாம்.

இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் மஹிந்த போன்றதொரு தலைவர் உருவாகவும் மாட்டார். இவர் வேறு யாருமல்ல துட்டகமுனு இளவரசரேயாகும்.

மேலும், இந்நாட்டு மக்கள் மஹிந்தவை போன்றே என்னையும் நேசிக்கின்றனர்.

மஹிந்தவிற்கு அடுத்தபடியாக நாட்டு மக்களினால் நேசிக்கப்படுபவர் இந்த குமார வெல்கமவாகும் என அவர் பதுரலிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

(riz)