500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது…

(FASTNEWS-COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் 500கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.

பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பெஹலியகொட குற்றவிசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.