5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 04 இளைஞர்கள் கைது

(FASTNEWS|COLOMBO) – மஹியங்கனை – தம்பராவ கிராமத்தில் நேற்று(20) 5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் அலங்கார பந்தல் இடம்பெறும் இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வழங்கியமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து ஏழு, 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடம் தொடர்பான தகவலும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.