வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…

வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…

ஒருவருக்கு அதிகமாக வியர்ப்பதற்கு வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக வேலை செய்வது தான். வியர்ப்பதுடன், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் வியர்வை சேரும் போது, அது கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிகம் வியர்க்கும் என்று தெரியுமா?

அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் பானங்களைப் பருகுவது, குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வது, காரமான உணவுகளை உண்பது, இறுக்கமான உடைகளை அணிவது, உடல் வறட்சி, மன அழுத்தம் மற்றும் டென்சன், மது அருந்துவது, மோசமான டயட், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை தான் முக்கிய காரணங்களாகும்.

உங்களுக்கு உடல் துர்நாற்றத்தில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டுமானால், சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

பேக்கிங் சோடா:
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற, நல்ல பலன் கிடைக்கும்

ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு சிறிது ரோஸ் வாட்டரை தடவுங்கள். இல்லாவிட்டால், குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து குளியுங்கள். இதனால் நாள் முழுவதும் உடல் ஒரு நல்ல மணத்துடன் இருக்கும்.

தக்காளி கூழ்:
தக்காளி கூழை நேரடியாக தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வந்தால், ஒரு நல்ல பலனைப் பெறலாம்.

எலுமிச்சை:
உடல் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தினமும் குளிகும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை தேய்க்க வேண்டும். நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.