
நல்லாட்சி என்றாலே அது ஐக்கிய தேசியக் கட்சி தான் – ராஜித
புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பிறகு நல்லாட்சியை செயற்படுத்துவதற்கு தொடர்ந்து முன் நின்றது ஐக்கிய தேசிய கட்சி என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி உருவாக்குவதற்காக தன்னுடன் அன்று இணைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியுடன் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தமைக்கு காரணம் அன்று காணப்பட்ட அதே அர்ப்பணிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நல்லாட்சிக்காக உருவாகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணிக்கு குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)