ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டால், பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்..

எதிர்வரும் காலங்களில் பேரூந்து கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியான்ஜித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்; ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதனால் ஒட்டு மொத்த பேரூந்து கைத்தொழிலும் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் டீசலின் விலை உயர்த்தப்பட்டால் அது பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ரூபாவின் பெறுமதி வீழச்சி மற்றும் டீசல் விலை உயர்வு பேரூந்து கைத்தொழில் துறையில் தாக்கம் செலுத்தும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட உள்ள பேரூந்து கட்டணத் திருத்தங்களின் போது குறிப்பிடத்தக்களவு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Rishma