
துமிந்த உட்பட நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை – சுசில்
கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
அன்நால்வருமான; துமிந்த சில்வா , மேர்வின் சில்வா, சரண குணவர்தன மற்றும் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோருக்கே இவ்வாறு வேட்புமனு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் கருத்து தெரிவித்த போதே சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார்.
(riz)