10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலைகளில் தரம் 6 க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த 5473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் முதல் கட்டம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.
ஆனால் கடந்த வருடத்தில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.