55 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 10 தங்க பிஸ்கட்களுடன் 3 இந்திய பிரஜைகள் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தனியார் விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த வேளையில், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த 3 இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் பயண பொதியில் இருந்து தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.