சிம்பாவே அணிக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது…

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புலவாயோவில் நேற்று(18) இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி, 25.1 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் கைப்பற்றியது.

 

R.Rishma