ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(19) மாலை கொழும்பு நெலும் பொக்குன மண்டபத்தில் இடம்பெற்ற ‘2018 இலங்கை அரச புகைப்பட விழா’ வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, ஜனாதிபதியின் இடக் கையில் கட்டுப் போட்டிருந்தது குறித்த விழாவில் பங்கேற்ற அனைவரதும் கவனத்தினை ஈர்த்தது எனலாம்.
மேலும் அவர், நேற்று(19) பம்பலபிடிய வஜிராராம தர்ம வித்தியாலய 100 வருட நிறைவு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

