இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…

இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…

இலட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை நடைபெற்ற பொது விவாதத்தில், டிரம்ப் உரையாற்றுகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சுதந்திரமான சமூகத்தை கொண்டது. வறுமையின் பிடியில் இருந்து இலட்சக்கணக்கானோரை வெற்றிகரமாக இந்தியா மீட்டெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்கிய சீனா மீது அமெரிக்கா சில தடைகளை அண்மையில் விதித்தது.

இதேபோல், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.