துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஜோடி பாதணி நேற்று(26) துபாயிலுள்ள புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் விலை சுமார் 1.23 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த பாதணி என்ற பெருமை பெற்றுள்ளது. குறித்த பாதணியில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதணியை Jada Dubai என்ற துபாய் நிறுவனமும், Passion Jewellers உம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் பாதணியை தயாரிப்பதற்கு, 9 மாத காலம் ஆனது என தெரிவித்துள்ளனர்.


