பிதுரங்கல சம்பவம் தொடர்பில் கைதாகிய மூவரும் விளக்கமறியலில்…

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைதாகிய மூவரையும் எதிர்வரும் 03ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று(26) சீகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட குறித்த மூன்று சந்தேக நபர்களையும் இன்று(27) தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.