ஹொங்கொங்’இல் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார்.
ஹொங்கொங்’இல் T-20 பிலிட்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் சமீபத்திய ஆட்டத்தில் ஹொங்கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் மிஸ்பா உல் ஹக் 18 ஆவது ஓவரில் 5 மற்றும் 6 வது பந்துகளை சிக்ஸருக்கு விளாசினார்.
பின்னர் 19வது ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளிளும் சிக்சரை விளாசி தள்ளினார்.
இந்த ஆட்டத்தில் மிஸ்பா உல் ஹக் ஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களை குவித்தார். அவர் சிக்சர் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=5elgLOGyzBk” width=”560″ height=”315″]