600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணனி மீட்பு…

(FASTNEWS| COLOMBO) 600 கடிதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணனி மற்றும் நிழல் பிரதி இயந்திரமொன்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த உபகரணங்கள் பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.