சட்டப் பேரவையின் வெற்றிடங்ககளுக்கு சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களை எதிர்வரும் 05ம் திகதிக்குப் பின்னர் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆராயப் பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப் பேரவை உறுப்பினர்களின் காலம் அண்மையில் நிறைவடைந்திருந்தது. உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரினைக் கொண்ட பேரவையில் மூன்று சிவில் சமூக உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படுவது, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரின் பரிந்துரைக்கு அமையவே ஆகும்.
அது தவிர சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரும் சட்டப் பேரவையினை பிரதிநித்துவப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னாள் சட்டப் பேரவையினை பிரதித்துவப்படுத்திய சிவில் சமூகத்தின உறுப்பினர்களாக, பேராசிரியர் ஏ.டீ.ஆரியரத்ன, பேராசிரியர் ரதிகா குமாரசுவாமி மற்றும் ஷிப்லி அசீஸ், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கான விஜித ஹேரத் ஆகியோரும் சட்டப் பேரவையினை பிரதிநிதித்துவம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.