வீதி விபத்துகளால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு…

வீதி விபத்துகளால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் 2,368 பேர் உயிரிழந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 778 பேர் மற்றும் பாதசாரிகள் 722 பேர் அடங்குவதாக நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார்.

இந்த மரணங்களை தவிர்த்துக்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.