
தெமட்டகொட துப்பாக்கிச்சசூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை…
தெமட்டகொடயில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பலரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, நேற்று முன்தினம்(28) ஏற்பட்ட இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.