தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகத்தை நாளை(02) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மெல்சிறிபுர பண்ணையிலுள்ள உணவகத்தை இரண்டு வருடங்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக குறித்த சந்தேக நபரால் 12 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சந்திரசிறி சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.