
தில்ஷான் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் களத்தில்…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினர் இது குறித்து தெரிவிக்கையில், அவ்வாறு எந்த கலந்துரையாடலும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளனர்.