நாமல் குமார அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவிப்பு…

நாமல் குமார அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவிப்பு…

சில அரசியல்வாதிகள் தான் அரசியலுக்கு வருவதனை விரும்பாததால், தான் அரசியலுக்கு வருவது குறித்த தீர்மானத்தினை மாற்றிக் கொண்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

எனினும், தான் தொடர்ந்தும் இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பிலான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி நாட்டினை காக்கும் பிரஜையாக செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களை அறிவூட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும், இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 05ம் திகதி அம்பாறை, மஹஓய நகரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.