நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பான பல பக்கத்திலான அறிக்கைகள் மற்றும் பென்டரைவ் ஆகியவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று(19) நீதிமன்றில் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக ஹொங்கொங் சென்ற குழுவினர் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.