ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்று(21) சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு…

ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்று(21) சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு…

எதிர்வரும் ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நேற்று(20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இன்று(21) நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் மக்களுக்கு எதிரான பிரேரணைகள் ஏதும் முன்வைக்கப்படாவிடின் வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவை வழங்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும், இன்னும் நாட்டு மக்களை கருத்திற் கொண்டு இனம், மதம் மற்றும் அரசியல் பேதமின்றி சில செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.