தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பம்…

தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பம்…

தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது தாமரைக் கோபுரத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருவதாக, இத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் இரண்டாவது உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரத்திலும் 10 ஹெக்டயர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்காக 104 மில்லியன் ​அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதுடன், இதில் 80 சதவீதமான நிதி சீனாவின் எக்ஸீம் வங்கியால் செலுத்தப்படுகின்றது.

இக்கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் 50 ஒலிபரப்பு சேவை வழங்குநர்களுக்கும் 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.