மின்சார அபிவிருத்திகளுக்கு கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசு உதவ இணக்கம்…

மின்சார அபிவிருத்திகளுக்கு கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசு உதவ இணக்கம்…

இலங்கையில் மின்சார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்க கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளினதும் தூதுவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மின் சக்தி எரிசக்தி அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்;

“.. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாகவும் மின்சாரத்திற்கான கேள்வி துரிதமாக அதிகரித்து வருகின்றது. இதற்கு முகங் கொடுப்பதற்காக நிலையான தீர்வொன்றை காண்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மின்சாரம் போன்ற அத்தியவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இலங்கை உலகின் பல்வேறு நாடுகளையும் விட முன்னணியில் இருப்பதாக இதன் போது பிரான்ஸ் மற்றும் கனேடிய தூதுவர்கள் தெரிவித்தனர். இது அரசாங்கம் என்ற வகையில் ஈட்டிய மாபெரும் வெற்றியாகுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் கருணாநாயக்க நுகர்வோருக்கு எவ்வித சுமையுமின்றி சிறந்த தொடர்ச்சியான மின்சார சேவையை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கென மாற்று மின்சக்தி மூலோபாயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதற்கு தமது நாடுகள் உயர்ந்த பங்களிப்பை வழங்குவதாகவும் பிரான்ஸ் மற்றும் கனேடிய தூதுவர்கள் இதன்போது தெரிவித்தனர்..” என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.