தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான ப்ரியரஞ்சனுக்கு விளக்கமறியல்…

தம்புள்ளை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான ப்ரியரஞ்சன குமாரவை எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ப்ரியரஞ்சன குமார என்ற பிரதேச சபை உறுப்பினர் நேற்று பிற்பகல் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கடந்த 17ம் திகதி இரவு சீகிரியா – கலாபுர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் சீகிரியா காவற்துறையில் வந்து முறைப்பாடொன்றை பதிவு செய்த போது இந்த பிரதேச சபை உறுப்பினர் மேலும் சிலருடன் காவல் நிலையத்தினுள் நுழைந்து குறித்த நபரை தாக்கி காயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.