
அனுராதபுரம் மற்றும் தென் மாகாணத்திற்குமிடையில் அதிசொகுசு புகையிரத சேவைகள்…
உயர்தரத்திலான அதிசொகுசு புகையிரத சேவையை நாட்டிற்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அனுராதபுரத்திற்கும், தென்மாகாணத்திற்கும் அதிசொகுசு புகையிரத சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இருந்து இதற்கான ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.