
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 174.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.