
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம்…
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டிருப்பதாக சுங்க திணைக்கள பணியாளர்கள் சங்கத்தின் உபச் செயலாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
7000க்கும் அதிகமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி தீர்க்கப்படாமல் தேங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.