
கடந்த வருடத்தை விட கூடுதலான பேரீத்தங்களை வழங்க சவுதி இணக்கம்…
நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை, கடந்த வருடத்தை விட கூடுதலான அளவு வழங்குவதற்கு இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா நாட்டின் பேரீத்தம்பழ அறுவடைக் காலம் நோன்புக்கு பிந்திய நிலையில் இடம்பெறுவதால் பேரித்தம்பழம் வழங்கும் நடவடிக்கைகள் சற்றுத் தாமதம் ஏற்படலாம்.
எனினும் அதனை துரிதமாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் சவூதி தூதுவர் உறுதியளித்துள்ளார் என முஸ்லிம சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.