
சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்க புதிய சுற்றுநிரூபம்…
கிராமிய வறுமையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்று அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
“எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக நேற்று (09) பிற்பகல் பொலன்னறுவை புதிய நகர நீர்ப்பாசன விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.