
மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்…
மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான பணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.