இலங்கை அணியானது உலகம் கிண்ண நிலைப்பாட்டில் இருந்து விலகுமா..?

இலங்கை அணியானது உலகம் கிண்ண நிலைப்பாட்டில் இருந்து விலகுமா..?

(FASTNEWS | COLOMBO) தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் விரிசல் நீடித்துக் கொண்டே செல்லும் நிலையில் இம்முறை இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதக் கூடாது என்ற பிடியில் இந்தியா ஐ.சி.சி இனை நச்சரிக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணியானது வலுவான நிலையில் தன்னை உலகக் கிண்ண போட்டிகளுக்காக தயார்படுத்திக் கொண்டுள்ள நிலையில் இலங்கை இந்தியாவினை ஆதரிக்கவா இல்லை பாகிஸ்தானை ஆதரிக்கவா என்ற குழப்ப நிலையில் உள்ள போதிலும் இலங்கை அணியானது கிண்ணத்தை சுவீகரிக்கும் உறுதி நிலையில் உள்ளது எனலாம்.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னனி முன்னாள் வீரர்கள் தெரிவிக்கையில்; இந்தியா தம்மை பலி வாங்குவதாகவும் தம்மில் பிழைகள் இல்லை என்றும் தமது நாடு பயங்கரவாதத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு தீனி போடுவதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.